காணவில்லை செய்தி ஒற்றரே…
ஆமாம் தலைவா…கன்னியாகுமரி,தேனி மாவட்ட திட்ட இயக்குநராக வனத்துறை அதிகாரிகளை நியமனம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த சங்கங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் திட்ட இயக்குநர்களுக்கான சங்கம் மெளனம் சாதித்து வருவதாக சில திட்ட இயக்குநர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
அதன் நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் ஒற்றரே…
ஜெயமான ஒருவரே முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரின் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து விட்டனராம். விரைவில் சங்கத்தில் நிர்வாக மாற்றம் வரலாம் என தெரிகிறது.இந்த பிரச்சனையை திட்ட இயக்குநர்களும்,கூடுதல் இயக்குநர்களும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை தெரிந்து வந்து கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.
























