ஒற்றை சங்கம்,அடிபணிந்த இளையான்குடி ஒன்றிய ஊரகவளர்ச்சி துறை – ஒற்றர் ஓலை

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கை செய்தியா ஒற்றரே…

ஆமாம் தலைவா… சங்கங்களுக்கு இடையே நடபெறும் சண்டை மாநிலம் முழுவதும் பரவும் நிலையில் உள்ளது தலைவா…

என்ன சொல்கிறீர் ஒற்றரே…

சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர் இடமாறுதல் விசயத்தில் அலுவலர்கள் சங்கம் மூக்கை நுழைத்து தமது சங்கத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரை எதிர்த்தே போராட்டத்தை அறிவித்து உள்ளது.

என்னதான் ஆச்சு ஒற்றரே..

சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும் தான் சார்ந்த சங்கம் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்துவிட்டாராம். பாதிக்கப்பட்ட மற்றொரு சங்கம் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை நடத்துவற்கு ஆயத்தமாகி வருகிறதாம் தலைவா..

இதற்கு முடிவுதான் என்ன ஒற்றரே..

சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியை முதலில் இடமாற்றம் செய்யவேண்டும். அனைத்து சங்கங்களையும் சரிசமமாக நடத்தும் அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் தலைவா என செய்தி கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்