ஊராட்சி செயலாளர் – OTP – சம்பளம் = இனி இப்படித்தான்!

ஜான்போஸ்கோ பிரகாஷ்

OTP

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்.

அதன் வெற்றியாக, இனி ஊராட்சிகளின் கணக்குகளை நிர்வகிப்பதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெழுத்து முக்கியமோ,அதுபோல ஊராட்சி செயலாளரின் கைபேசிக்கு வரும் OTPஐ உள்ளீடு செய்தால் மட்டுமே ஊராட்சி கணக்குகளுக்குள் நுழைய முடியும்.

சம்பளம்

ஊராட்சிகளின் கணக்கில் முதல் செலவே ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பணியாளர்களின் சம்பளம் மட்டுமே. சம்பளம் போட்ட பிறகே…மின்சாரம் மற்றும் அனைத்து செலவுகளையும் செய்திட முடியும்.

இப்படி ஒன்றன்பின் ஒன்றாகவே உள்நுழையும் படி இணையத் தளம் வடிவமைக்கப் பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோபிராகாஷ் அவர்களும் அந்த செய்தியை உறுதி படுத்தினார்.

அவர்களின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக கிடைத்துள்ள  ஆரம்ப வெற்றிக்கு நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.

முந்தைய செய்தி

ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?

Also Read  பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்