சிவராமன்
நமது இணைய தளத்தில் இடமாறுதல் பற்றிய செய்தி வந்த பிறகு,அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆணையரின் ஆணை முழுமையாக பின்பற்றப்படும் என்றார். சொன்னது போல உத்தரவு வந்துள்ளது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்களுக்கு வட்டார அளவில் பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக கலந்தாய்வு நடத்திடும் பொருட்டு கீழ்கண்டவாறு தேதி நிர்ணயம் செய்தும், கலந்தாய்வு (Counselling)-க்கான கண்காணிப்பு அலுவலர்களாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் / தணிக்கை) ஆகியோரை நியமனம் செய்தும் இதன்வழி உத்தரவிடப்படுகிறது.
கலந்தாய்வு நடைபெறும் நாள்:
கலந்தாய்வு நடைபெறும் தேதிகளில் தமது ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அனைத்து ஊராட்சி செயலர்களிடமிருந்து முதுநிலை அடிப்படையில் பணிமாறுதலில் செல்ல விரும்பும் மூன்று ஊராட்சிகளை குறிப்பிட்டு வரிசைப்படுத்தி விண்ணப்பிக்க தெரிவித்து விண்ணப்பங்களை பெற்று புத்தக வடிவில் அறிக்கையினை தயார் நிலையில் வைத்திருக்கவும், மேலும் ஊராட்சி செயலர்களுக்கு தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் இக்கலந்தாய்வை மேற்குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடத்தி வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல்களை வழங்கிடவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு(கி.ஊ) தெரிவிக்கப்படுகிறது.