SIR பணியில் ஒத்துழைக்காத ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் பணியிடைநீக்கம் – வருவாய்துறை அதிகாரியின் ஆணவப்பேச்சு

வாக்களர் சிறப்பு திருத்தம்

SIR பணியில் ஈடுபடும் வருவாய் துறையினருக்கு ஒத்துழைக்காத ஊராட்சி செயலாளர் மற்றும் கணிணி பணியாளரை மாவட்ட ஆட்சியரிடம் கூறி பணியிடை நீக்கம் செய்வோம் என மதுரை மாவட்ட வருவாய் துறை அதிகாரி தனது துறை பணியாளர்களுக்கு குரல் பதிவு அனுப்பி உள்ளார்.

அந்த குரல்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ஊராட்சி செயலாளர்களுக்கு அவர்களின் துறைரீதியான பணிகளை செய்தற்கே காலம் போதாது. இதில்வேறு, இந்த பணிக்கு ஒத்துழைக்காத ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என தனது அதிகார எல்லை தாண்டி வருவாய் துறை அதிகாரி பேசுவது முறையற்ற செயல்.

சம்மந்தப்பட்ட அந்த ஆதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு துறைகளின் எல்லை என்பது மெல்லியது. பிற துறைமீது வன்மம் கொண்ட இந்த பேச்சை ஆரம்ப நிலையிலேயே தடுத்திட வேண்டும்.

இல்லையெனில், இரண்டு துறைகளுக்கிடையே மோதலாக உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால்,அரசு நிர்வாகம் செயல் இழந்து போய்விடும்.

இருதுறைகளின் உயர் அதிகாரிகளும் இந்த விசயத்தில் உடனடியாக கவனம் செலுத்திட வேண்டும்.

தேர்தல் நெருங்குது முதல்வரே…சர்வ ஜாக்கிரதையாக செயல்பட வேண்டிய தருணம் இது.

Also Read  ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வும் - இடமாறுதலும்