மின்சார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாராப்பூர் ஊராட்சி

புதுக்கோட்டை மாவட்டம்

வாராப்பூர் ஊராட்சி வளச்சேரிபட்டி கிராமத்தில் குடிநீர் மற்றும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் தெருவிளக்குகள் சார்ந்த டிரான்ஸ்பார்மர் பழுது ஆனவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பெருங்களூர் உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கு தகவல் அளித்த அடுத்த அரை மணி நேரத்தில் போர் மென் மற்றும் லயன் மேன் மற்றும் பணியாளர் வருகை தந்து அதற்கான கருவி கொண்டு பழுதை உறுதி செய்தார்கள்.

இருப்பினும் பழுது கண்டுபிடித்த அடுத்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அருகில் இருந்த டிரான்ஸ்ஃபர் இல் இருந்து தற்காலிகமாக மின்சாரம் வழங்கி பொது மக்களுக்கு உதவி செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து விடுமுறை கழித்து என்னுடைய லெட்டர் பேடில் கோரிக்கை மனு எழுதி மாவட்டத்தின் தலைமை செயற்பொறியாளர் அவர்களை நானும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி அவர்களும் அண்ணன் உடையப்பன் அவர்களும் சந்தித்தோம்.

சந்தித்த அடுத்த அரை மணி நேரத்தில் மாற்று டிரான்ஸ்பார்மர் வழங்க உறுதியளித்து மறுநாளே வழங்கி தற்சமயம் நிரந்தர தீர்வு எட்டப்பட்டுள்ளது,

விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அதிரடியாக செயல்பட்ட பெருங்களூர் மின்சார வாரிய அனைத்துப் மின் வாரிய பெருமக்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட மின்சார வாரிய அதிகாரிகள் அனைவருக்கும் வாராப்பூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

இந்த கோரானா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு சற்றும் குறைவில்லாதது மின்சார வாரிய துறை பணியாளர்களின் பணி…

இவர்களைப் போன்றவர்களின் பணியால் தான் இவ்வுலகம் சுழன்று கொண்டிருக்கிறது…

இவ்வாறு வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபோல பல பேரிடர் காலங்களிலும் மின்சார ஊழியர்களின் பணி மகத்தானது. குளுகுளு அறையில் இருந்து கொண்டு உத்தரவு போடுபவர்களை விட ஊதியம் குறைவு என்றாலும்,இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் இவர்களுக்கு ஒரு ராயல் சாலூட்.