பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி

நாகப்பட்டினம் மாவட்டம்

கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்

மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.

ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்….

1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்தை நமது ஊராட்சியின் முடிவாக ஏற்று காவல்துறையுடன் கலந்தாய்வு.

2.Tasmac மதுக்கடைகள் அகற்ற வலியுறுத்தி நமது ஊராட்சிமன்றம் நிறைவேற்றிய கிராமசபை தீர்மானத்தை முன்னிறுத்திய நடவடிக்கைகள்.

3.கொரோனா பரவலை நமது பிரதாபராமபுரம் ஊராட்சியில் கட்டுப்பாட்டில் வைக்க நமது ஊராட்சி மன்றம் மிக கடுமையாக போராடி வரும் இந்நிலையில் Tasmac மதுக்கடைகள் திறப்பின் மூலமாக அரசின் விதிமுறைகளான முக கவசம், கைகளை சோப் போட்டு கழுவுதல்,சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க இயலாது எனும் நிதர்சனத்தை வலியுறுத்தியும்,மக்கள் போதிய வருமானம் இன்றி தவிக்கும் இந்நிலையில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மிக மோசமான நிலைக்கு மக்கள் ஆளாக நேரிடும் என்பதை வலியுறுத்தியும் கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் திறப்பதற்கு தடை கோரி வட்டாட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அகியோரை சந்தித்து கோரிக்கை.

சபாஷ்….இது போல அனைத்து ஊராட்சிகளும் ஒன்று கூடி போராடினால் மனித இனத்திற்கே அது மகத்தான செயலாகும்.

Also Read  புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்

ஊராட்சி மன்றத்தலைவர் சிவராசு அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நமது இணையத்தின் சார்பாக இவர்கள் கோரிக்கையை வென்றெடுக்க தோள் கொடுப்போம்.