புதுக்கோட்டை மாவட்டம்
35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்து சில ஆண்டுகள் வரை எந்த ஒரு பாதிப்புமின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த வாராப்பூர்ஊராட்சி வளச்சேரிபட்டி ஆழ்குழாய் கிணறு தற்பொழுது நாற்பது அடி நீர்மட்டம் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக நீர் வழங்குவதில் குறைவு காரணமாக 40 அடி ஆழம் புதிய பைப் இறக்கப்பட்டு தற்காலிகமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்பட்டுள்ளது, நம்முடைய ஆராய்ச்சியின் படி குளங்கள் மற்றும் ஊரணி கள் முறையாக உள்ள நம்முடைய ஊராட்சி பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் மட்டம் குறையவில்லை, எந்தெந்த பகுதிகளில் முறையாக ஊரணிகள் மற்றும் குளங்கள் வெட்டப்படாமல் முழுமையாக பராமரிக்கப்படாமல் உள்ள பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது, ஆகவே நம்முடைய நீர் மேலாண்மை சார்ந்த பணியை இன்னும் துரிதப்படுத்த வேண்டிய தருணம் இது வாருங்கள் ஒன்றிணைவோம் வென்றுகாட்டுவோம் என்று ௯றி உள்ளார் ஊராட்சி மன்றத்தலைவர் சதீஸ்.
இவரைப்பற்றி தெரிந்து கொள்ள தேடியபோது பல விடயங்கள் கிடைத்தது்.
பதவி இல்லாத போது இவர் செய்த செயல்களே பாரட்டுக்குரியது. பசுமை இயக்கம் கண்டு,குளம் தூர்வார்தல் உட்பட இயற்கையை நேசித்த இளைஞர்.
இன்று…ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,இன்னும் வேகம் எடுக்கிறது இவரின் மக்கள் பணி.
நமது இணையத்தின் சார்பாக இவருக்கு வாழ்த்துக்கள்.