பொய்யாக்கரைபட்டி ஊராட்சி

பொய்யாக்கரைபட்டி ஊராட்சி /Poyyakaraipatty Panchayat

தமிழ்நாட்டின் மதுரைமாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பொய்யாக்கரைபட்டி. இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3167 ஆகும்.

தற்போதைய நிலவரப்படி 3467 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 1636 பேரும் ஆண்கள் 1731 பேரும் உள்ளனர். இவ்வூராட்சி மதுரை – அழகர் கோவில் சாலையில், கள்ளந்திரி – அழகர்கோவிலுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு மூணூர், நாயக்கன்பட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.

Also Read  பே.சுப்புலாபுரம் ஊராட்சி - மதுரை மாவட்டம்