எடையூர்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமம். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்.
.திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டைச் சாலை நடுவே அமைந்துள்ளது. எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன.
அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம், குமாரபுரம் போன்ற சிறு கிராமங்களை உள்ளடக்கிய பெரிய கிராமம்.
இக்கிராமத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டது.
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இங்கு உள்ளது. இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
இந்தக் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.