நாம சொன்ன செய்தி அடுத்து நடவடிக்கை என்ன என விசாரித்தோம் தலைவா…
எந்த விசயமாக ஒற்றரே…
அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ என சம்மந்தப்பட்டவரின் பெயர் குறிப்பிடாமல் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே…வேலுநாச்சியார் மாவட்டத்தில் தானே.
ஆமாம் பாஸ்…இனிம ஒளிவு மறைவு தேவையில்லை.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பாஸ்கரன் என்பவரின் அடாவடி தொடர்கிறது.
உயர் அதிகாரி அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லையா ஒற்றரே.
ஆமாம் தலைவா…ஒட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளாகி இறந்ததற்கு காரணம் மட்டுமல்ல, பல ஒழுங்கீனமான நடவடிக்கையால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு,மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் பாஸ்கரன்.
அப்படிப்பட்டவருக்கு எப்படி ஆளுமை மிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் பணி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை ஒற்றரே..
அந்த இடத்திற்கான மரியாதை விடுத்து, போதையில் மிதப்பது,பணிகளை சரிவர செய்யாமல் இருப்பது என அவரின் அடாவடித்தனம் தொடர்கிறது தலைவா. அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகப்பெரிய தவறு மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.