இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை

தமிழக அரசு

இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5 இஆப இடமாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,ஈரோடு,தர்மபுரி,செங்கல்பட்டு மாவட்ட பணியிடங்கள் நிரப்பபடாமல் காலியாகவிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை

காலியாக உள்ள பணியிடங்களை ஊரக வளர்ச்சித்துறையில் பதவி உயர்வில் வருபவர்களை கொண்டு நியமித்திட வேண்டும்.

நேரடி தேர்வாக வரும் இந்திய ஆட்சி பணியாளர்களை திட்ட இயக்குநராக பணி அமர்த்துவதில் வரன்முறையை ஏற்படுத்தவேண்டும்.

குறிப்பாக, சென்னைக்கு அருகாமையில் தொழில்சாலைகளை கொண்டுள்ள திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் கிராமங்கள் அதிகம் இல்லாத மாவட்டங்களுக்கு நேரடி இஆப அதிகாரிகளை நியபித்து கொள்ளலாம்.

மற்ற மாவட்டங்களில் ஊரக துறையில் பணியாற்றுபவர்களை திட்ட இயக்குநராக நியமனம் செயவதற்கு அமைச்சர், துறையின் முதன்மை செயலாளர், ஆணையர் மூவரும் இணைந்து விரைந்து முடிவெடுத்திட வேண்டும்.

Also Read  முதன்மை செயலாளருடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு