பயந்ததுபோல காரியங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது தலைவா…
என்ன விசயம் ஒற்றரே..
தனி அலுவலர் காலகட்டத்தில் அதிகாரிகளோடு ஆளும் கட்சியினரும் கூட்டணி அமைப்பது கடந்த காலத்தில் நடத்தது. அதுபோல,இப்போதும் அரங்கேற தொடங்கிவிட்டது தலைவா…
அனைத்து இடங்களிலுமா ஒற்றரே…
இல்லை தலைவா…குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இப்போது அரங்கேறத் தொடங்கி உள்ளது. அனைத்து இடத்திற்கும் பரவுவதற்கு முன் தடுத்திட வேண்டும்.
சரியாக சொன்னீர் ஒற்றரே…அவர்கள் செய்யும் செயலால் ஆளும்கட்சிக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும்.
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தொடங்கி மாவட்ட ஊராட்சி அமைப்பு வரை உள்ளூர் இளைஞர்களோடு நமது நிருபர்களும் கண்காணித்து வருகிறார்கள். அப்படி கிடைக்கும் செய்திகளை முதலில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்போம் தலைவா…
அது தான் சரி ஒற்றரே…அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதனை மக்களுக்கு நமது ஒற்றர் ஓலையில் செய்தியாக வெளியிடுவோம் என கூறிவிட்டு திரும்பி பார்பதற்குள் மறைந்து விட்டார் ஒற்றர்.