குடியரசு தின கிராம சபை
தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி அமைப்புகளில் தேசிய கொடியை சில மாவட்டங்களில் மட்டும் பற்றாளர்கள் கொடியை ஏற்றுவர் என அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை ஊராட்சி செயலாளர்கள. சங்கத்தின் சார்பாக ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
தனது கவனத்திற்கு வந்த நொடியே, ஊராட்சி செயலாளர்களே தேசிய கொடியை ஏற்றுவதற்கான அறிவுறுத்தலை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
தேசிய கொடிக்கும், ஆணையருக்கும் நமது செய்தி இணைய தளம் சார்பாக ராயல் சல்யூட்.