ஊராட்சி செயலாளரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

கண்டனம்

கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம்,தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலரும்,ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் முன்னோடியுமான அன்பு சகோதரர் திரு.நரசிம்மன்(எ)முகுந்தன் அவர்கள் இன்று பிற்பகல் 02.12 மணியளவில் எனது வாட்சப் எண் 9386666666 ல் 03 கடிதங்களை எழுதியனுப்பியுள்ளார்..

அதில் தனக்கு கோவை மாவட்ட உதவி இயக்குநர்(ஊ)ஆக பணிபுரிந்துவரும் திரு.கமலக்கண்ணன் பல்வேறு வழிகளில் கொடும் டார்ச்சர் செய்வதாகவும்,பல்வேறு வழிகளில் டிமாண்ட் செய்வதாகவும்,இதனால் தான் தனது வாழ்வை முடித்துக்கொள்வதாகவும் சொல்லி குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதம் வாட்சப் வழியே அறிந்த நான் உடனடியாக அவருக்கு தொடர்புகொண்டேன்,போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்த காரணத்தால் அங்குள்ள சில நட்பு வட்டாரங்களை தொடர்புகொண்டு தேடியபோது அவர் ஓரிடத்தில் விஷமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாகவும்,ஆம்புலன்சில் ஏற்றிச்செல்வதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது..மேல்சிகிச்சை தீவிரமுடன் நடைபெற்று வருகிறது..

கோயமுத்தூர் மாவட்டத்தின் மொத்த குத்தகைதாரராக செயல்பட்டுவரும் திரு கமலக்கண்ணன் அவர்கள் அங்கேயே உதவி திட்ட அலுவலர்(வேஉதி),அங்கேயே மூன்று ஆண்டுகள் பிஏபிடி,அங்கேயே ஏடிபி கூடுதல் பொறுப்பு வகித்தவர்..இடையே சேலத்துக்கு உதவிதிட்டஅலுவலராக(மதி) மாற்றப்பட்டபோதும் மூன்று மாதகாலமாக பணியேற்காமல் விடுப்பு கொடுத்து மீண்டும் தனது மொத்தகுத்தகை மாவட்டமான கோயமுத்தூரிலேயே ஏடிபியாக பணிபுரிந்து வருகிறார்

அராஜகம்,அட்ராசிட்டி,குறிவைத்து சுருட்டுதல் என எண்ணற்ற வேலைகளை செய்து வந்த அவர்,இன்று ஒருவரின் உயிரை மாய்க்க தூண்டுமளவுக்கு செயல்பட்டிருப்பது மிக கண்டிக்கத்தக்கது.

Also Read  ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

மரியாதைக்குரிய கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட ஏடிபி அவர்களை மாவட்டத்திலிருந்து உடனடியாக விடுவித்திடவும்,அவர் மீது தற்கொலை முயற்சி செய்ய தூண்டியதாக வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்திட அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது..உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மாநில அமைப்பு மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்கும் என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்!

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
மாநில மையம்