என்ன செய்தி ஒற்றரே..
மக்களை நேரடியாக தொடர்பு உள்ள ஊரக வளர்ச்சி துறைக்கு செயலாளராக இருந்த வடநேரே இப்போது இன்ச்சார்ஜ் செயலாளராக தொடர்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு புதிய செயலாளர் நியமிக்க படலாம் என்ற நினைத்த வேளையில் புதிய உத்தரவு வரவில்லை.
என்ன காரணம் ஒற்றரே…
தலைமை செயலாளருக்கு நெருக்கமான வட்டத்தில் வடநேரே உள்ளதால், இன்னும் ஒரு மாதத்திற்கு இன்ச்சார்ஜ் செயலாளராக வடநேரே அவர்களே தொடர்வார் என்பதே யாதார்த்த நிலை. அமைச்சர் ஆனந்த் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையை கவனிப்பதால் இரண்டு துறைகளின் செயலாளராக வடநேரே தொடர்கிறார் போலும் தலைவா…
மூத்த பத்திரிகையாளர்கள் கூட பேசாத அமைச்சருக்கு சரியான ஜோடி செயலாளர் என நக்கலாக கூறுகின்றனர் ஒற்றரே…
நானும் ஒரு தகவல் அறிந்தேன் தலைவா…தெலுங்கு மற்றும் கன்னட மொழியினர் மட்டுமே உயர் அதிகாரிகளாக வருவதற்கு தகுதியானவர்கள் என்கின்றனர். அதற்கு காரணம் முதல்வரை சுற்றி உள்ள அதிகாரம் மையங்களும் மேற்படி மொழியினரே தலைவா…
தமிழகத்தின் தலையெழுத்தை நினைத்து அழுவதை தவிர வேறு வழி இல்லை ஒற்றரே…
கூடுதலாக ஒரு செய்தி தலைவா…பழைய தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் அவர்களின் கண்ணசைவில் பல காரியங்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறதாம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.
























