புறப்படுகிறார் அழகர் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…பக்தி செய்தியா.

இல்லை தலைவா…இடமாறுதலில் செல்லும் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரை பற்றிய செய்தி.

விவரமாக சொல்லும்…

ஆணையர் அவர்களின் காலகட்டத்தில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி திட்ட அலுவலர் வரை நம்மிடம் நேற்று முதல் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நேரில் புகழ்பாடுவதே நடைமுறை அல்லவா ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆனால், ஆணையர் அவர்கள் வேறு துறைக்கு செல்கிறார் என உத்தரவு வந்த பிறகே அவரை பற்றி அதிகமாக பாராட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஆடிட் பிரச்சனை இன்றி ஓய்வு பெறுவதற்கான ஒற்றை காரணம் ஆணையர் என்கின்றனர்.

வேறு என்ன ஒற்றரே…

35 க்கும் மேற்பட்ட அரசு துறைகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை அலுவலகம் போல வேறொரு துறையின் அலுவலகம் இல்லை. தனியார் நிறுவனத்திற்கு இணையான வசதிகளோடு மாற்றியவர் ஆணையர் என்கின்றனர் பனகல்மாளிகை அதிகாரிகள்.

சிறப்பு..வேறு என்ன தகவல் ஒற்றரே..

பரிபாலனை செய்துவிட்டு அழகர் மதுரையை விட்டு புறப்படும் போது உள்ள மக்களின் மனநிலையில் தான் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளனர் தலைவா…

மாபெரும் சபைதனில் என்ற பாடல் ஆணையருக்கு பொருந்தும் ஒற்றரே…

அருமையாக சொன்னீர்கள் ஒற்றரே…கல்வியின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட அவரின் பயணம் தொடரட்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க - ஒற்றர் ஓலை