தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்குதா தலைவா..
ஆமா ஒற்றரே..இப்போ அதுக்கு என்னவாம்?
போராட்டத்தில் இருந்தப்போ ஊராட்சி செயலர்களுக்கான ஓடிபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர்,உதவியாளர் என அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டதாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை ஒற்றரே..
என்ன சமாச்சாரம் என்றால்,பலர் சஸ்பென்ட்,ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் செய்யப்பட்டனர்.இதில் பலருக்கு இன்னமும் ஊராட்சி செயலருக்கான வரவு செலவு ஓடிபி கொடுக்கவில்லையாம்.ஒன்றிய அதிகாரிகள் இன்னமும் வச்சுட்டு ஒரே வசூல் வேட்டை நடத்துறாகளாம்..அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏடி பஞ்சாயத்துகளுக்கும் கொடுத்து வருவதால் ஏடி பஞ்சாயத்துகளும் ஓடிபி மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டார்களாம்.
என்ன சொல்ற ஒற்றனே..இது தவறுதானே?
தவறாவது சரியாவது.இதை பார்த்தால் வசூல் ஆகுமா?அதனால் எல்லோரும் ஒரு மாதங்களுக்கு மேலாக கூட சத்தமே இல்லாமல் கம்பெனி போட்டு ஆட்டைய போட்டு கொண்டுள்ளனர்
ஊராட்சி செயலாளர்கள் ஒன்னும் சொல்லவில்லையா ஒற்றரே…
ஊராட்சி செயலாளர்கள் கேட்டாலும் ஏடி பஞ்சாயத்துகள் எங்களுக்கு இன்னமும் மேலிருந்து உத்தரவு வரவில்லை என சமாளிக்கிறார்களாம். என்னத்த சொல்ல?உரியவர்களிடம் நாம் செய்தியை கொண்டு சேர்ப்போம் என சொல்லி மறைந்தார் ஒற்றர்.























