தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?

தேவகோட்டை

ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.

சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டோம். ஆனால், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பிடிஓ விற்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர்.குறிப்பாக, சத்துணவு துறையில் பணியாற்றும் ஊழியர்கள்.

அப்படி இருந்தும், அவரை ஏதோ ஒரு மாவட்ட அளவிலான அதிகார மையம் காப்பாற்றி வருகிறது. இதுமேலும் தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தவறான முடிவை எடுத்துவிடுவார்களோ என அச்சம் உள்ளது.

அப்படி ஏதாவது நடந்தால், அவர் மட்டுமல்ல…அவரை காப்பாற்றும் அந்த சக்தியும் பொறுப்பேற்க வேண்டியது வரும் என நம்மிடம் வருத்தப்பட்டு கூறினார் ஒன்றிய அலுவலக பணியாளர் ஒருவர்.

Also Read  படலையார்குளம் ஊராட்சி - திருநெல்வேலி மாவட்டம்