மார்ச் 26 – ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்

தமிழ்நாடு

இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 30-04-2025 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது.

ஊரக வளர்ச்சி

மார்ச் 26 ம் தேதி புதன்கிழமை இந்த துறையின் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.பல்வேறு அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை, கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை சீர்திருத்தம் செய்வது பற்றிய அறிவிப்பு வெளிவரலாம்.

ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் அடிப்படை ஊழியர்களுக்கு சில பயனுள்ள அறிவிப்புகள் வரவேண்டும் என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தூய்மை காவலர்கள்,மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பாளர்களின் ஊதியம் பற்றிய எதிர்பார்ப்பு.

ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்தை கருவூலம் அல்லது ஊராட்சி ஒன்றியகணக்கில் இருந்து கிடைத்திடும் வகையில் மாற்றம் வரவேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்ப்பது பற்றிய அறிவிப்பு வருமா என பெரும் எதிர்பார்ப்பு.

Also Read  பருவதனஅள்ளி ஊராட்சி- தருமபுரி மாவட்டம்