உள்ளாட்சி கட்டிடங்களில் பெயர் பலகை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

28 மாவட்டங்கள்

ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிந்து விட்டது.  தனி அலுவலர் கையில் நிர்வாகம் வந்துள்ளது.

நிதி நிர்வாகம் கையாள்வதற்கான வழிமுறைகள் நடந்து வருகிறது. பதவி காலம் முடிந்த உள்ளாட்சி நிர்வாக கட்டிடசுவர்களில்  பதவி காலம் முடிந்த தலைவர்,துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக, ஊராட்சி கட்டட முகப்பில் கட்சி கலரில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. உடனடியாக அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல, அடுத்து உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய தலைவர்கள் பதவி ஏற்கும் போது, ஊராட்சி மன்றங்களில் கட்சி கலர்களில் பெயர் எழுதுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். ஏனெனில், கட்சி சார்பில்லாது சுயேட்சை சின்னத்தில் ஊராட்சி தலைவர்கள் போட்டியிட்டு வென்று வருகிறார்கள்.

ஆகவே, ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கட்சி கலர்களில் பெயர்களை எழதுவதை எதிர்காலங்களில் நிரந்தரமாக தடை செய்து ஆணை பிறப்பிக்கவேண்டும்.

இணைப்பு செய்தி: பெயர் பலகை நீக்க நடவடிக்கையை தனி அலுவலர்களான திட்ட இயக்குநர்,உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களே எடுக்கலாம். இதற்கு சிறப்பு அனுமதி தேவை இல்லை.

Also Read  ஊராட்சிகள் இணைப்பு - ஊழியர்கள் நிலை என்ன?