மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா இஆப அவர்கள்,1994ல் குரூப் 1 தேர்வில் வென்று இதே துறையில் பணியில் சேர்ந்து இன்றைக்கு அதே துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றும் சாதனையை படைத்துள்ளார்.
ஆகவே,ஊரக வளர்ச்சித்துறையை பற்றி ஆணிவேர் வரை அறிந்தவர். அவரின் காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பல்வகை கட்ட அதிகாரிகளுக்கு பலவிதமான நன்மைக்கான விதிகள் தளர்த்தப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் கடைநிலை ஊழியர்களான தூய்மை காவலர்கள்,மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பாளர்கள்,கணிணி பணியளார்கள் போன்றவர்களுக்கான ஊதியத்தை கோரிக்கைகளின் அடிப்படையில் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் ஆணையரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட வேண்டும்.
மாநகராட்சி பணிகளில் வருவாய் துறையில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை போல, ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் நகராட்சி துறையில் பணியாற்றுவதற்கான வழிமுறைகளை ஆணையர் காலத்திலேயே பெற்றுத்தர வேண்டும்.
இப்படி பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களின் காலகட்டத்தில் நிறைவேற்றிடல் வேண்டும். ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் தலைமுறைகள் கூட ஆணையரை நினைத்து போற்றும்.

நினைத்ததை முடிக்கும் ஆற்றல் கொண்ட ஆணையர் அவர்கள், சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நாமும் உறுதியாய் நம்புகிறோம்.