2000
தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் நிலை. உள்ளது. ஒரு ஊராட்சி பணிகளை செய்வதற்கே பணி நேரம் கடந்தும் உழைக்கவேண்டி உள்ளது. இந்நிலையில், மற்றொரு ஊராட்சி பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் தமிழ்நாடு முழுவதும் உள்ளது.
TNPSC
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டிய தேவை உள்ளது. அப்படி காலி பணியிடங்களை நிரப்பிடும் செயலில் புதிய வழிமுறைகளை கொண்டு வரவேண்டும்.
பழைய முறையில், ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி செயலாளர்களை நியமித்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் தனி அலுவலர் காலகட்டத்தில் வேறொரு நடைமுறை நடைபெற்றது.
இனி வரும் காலத்தில் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் மூலமாக ஊராட்சி செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வரவேண்டும்.
ஏனைனில்,அனைத்து ஊராட்சிகளும் கணிணி மயம் ஆகிவிட்டதால் ஊராட்சி செயலாளர்களின் தேர்வு என்பது போட்டித்தேர்வாக அமைந்திட வேண்டும்.ஊரக வளர்ச்சி துறையின் முதுகெழும்பாக உள்ள ஊராட்சி செயலாளர் பணி நியமனம் என்பது சரியான நெறிமுறைகளோடு நடந்திட வேண்டும்.
விரைவில் சரியான வழிமுறைகளின் படி ஊராட்சி செயலாளர்கள் நியமனம் நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.