ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதிலும்,அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும்,கிராம ஊராட்சியின் ஆவணங்களை பராமரிப்பதிலும்,கிராம ஊராட்சி நிர்வாகங்களை நடத்துவதிலும்,அரசின் வரி வருவாயினை வசூலிப்பதிலும் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது

தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் தற்போது 1300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது.பல ஊராட்சி செயலர்கள் ஒரு ஊராட்சியையே நிர்வகிப்பதில் கடுஞ்சிரமம் உள்ள நிலையில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தலா 03 ஊராட்சியைகூட பொறுப்பு ஊராட்சியாக பார்க்க வேண்டிய சூழல் உள்ளது..இதனால் ஊராட்சி செயலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஊராட்சி செயலர் பணிவிதிகள் அரசாணையில் ஊராட்சி செயலர் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் நியமிக்கப்படும் முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் TNPSC மூலம் காலியிடங்களை நிரப்பிட நீண்டநாளாக கேட்டு பல்வேறு போராட்ட இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக ஊராட்சி மன்ற தலைவர் மூலம் நேரடி நியமனம் செய்வது தடை செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது..

Also Read  பா.பொன்னையா இஆப அவர்களுக்கு பதவி உயர்வு

எனவே இனியும் காலத்தை நீடிக்காமல் ஊராட்சி செயலர் காலியிடங்களை நிரப்பிட ஏதுவாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள கனிவுடன் வேண்டுகிறோம்

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்..