முதல்வரும்- ஊராட்சி தலைவரும்..ஓர் ஒப்பீடு

இரண்டு பேரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

முதல்வருக்கு தனது ஆளுமைக்கு உட்பட்ட அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் உண்டு.ஆனால்,ஊராட்சி தலைவர்களுக்கு கிடையாது.

காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி தலைவர்களுக்கு உண்டு.ஆனால், முதல்வருக்கு கிடையாது.

தனக்கான அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு்.ஆனால், துணைத் தலைவரை மாற்றும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு கிடையாது.

மாநிலத்தில் முதல்வரே உச்சபட்ச அதிகாரம் கொண்டவர். ஆனால், ஊராட்சி தலைவருக்கு மேல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.

மாநிலத் தேவைகளுக்கான நிதி ஆதாரத்திற்கான முடிவுகளை முதல்வர் எடுக்கலாம். ஆனால், மாநில,மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்கும் நிலையிலேயே ஊராட்சி நிர்வாகம்.

இப்படி பல்வேறு உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

மாநில சுயாட்சி போல, உள்ளாட்சியில் தன்னாட்சியே சரியான நேர்கோடாகும். தன்னாட்சி கிடைக்குமா உள்ளாட்சிக்கு?

Also Read  ஊராட்சி தேர்தல் விரோதக் கொலை