ஆலோசனை
சென்னை தமிழக அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான வரி வசூல் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் உதவி இயக்குநர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஏனவே,20ம் தேதி ஆய்வு கூட்டத்தை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என உதவி இயக்குநர் பலர் கோரி வருகின்றனர். அனைத்தும் அறிந்த ஆணையர் அவர்கள் இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என கூறுகின்றனர்.