ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களும்,சண்டைகளும் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…தலைப்பே தாறுமாறாக உள்ளது.

ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள சங்கங்களும்,அதற்குள் நடக்கும் சண்டைகளும் சமீபகாலமாக அதிகமாக உள்ளது.

அப்படியா ஒற்றரே…

ஆமாம் தலைவா…சங்கங்களில் உள்ள நல்ல விசயங்களை முதலில் பேசிவிடலாம். மற்ற துறைகளை விட இந்த துறையில் உள்ள சங்கங்களில் பெரும்பான்மையானவை கட்சி சார்பில்லாது இயங்குகின்றன.

பல சங்கங்கள் சிறப்பாக செயல்படுவதை நானும் அறிவேன் ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆனா,தங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க போராடுவதை விடுத்து,சகோதர சங்கங்களோடு வாட்ஸ்அப்,பேஸ்புக் என இணைய தளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

நானும் தொடர்ந்து வாசித்துவருகிறேன் ஒற்றரே…

அதுமட்டுமல்ல, நேரடியாக சில மாவட்டங்களில் தங்கள் சங்கங் களுக்காக போஸ்டர் யுத்தம்,நேரடி சண்டை என அதகளப்படுகிறது. ஒன்றிய,மாவட்ட பதவியில் உள்ள அதிகாரிகள் தங்கள் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு தனது அதிகாரங்களை பயன்படுத்தி மிரட்டும் செயலும் நடைபெறுகிறது.

அப்படியா ஒற்றரே…

பல மாவட்டங்களில் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்லாமலே சம்பளம் வாங்குபவர்களும் உள்ளனர்.சங்கப் பணி என மிரட்டல் தொனியில் உயர் அதிகாரிகளையும் மிரட்டும் செயலும் நடைபெற்றுவருகிறது தலைவா

கொடுமையாக அல்லவா உள்ளது ஒற்றரே…

அதைவிட சில சங்கத்தில் சாதி மேலாண்மையும் உள்ளது.சில நிர்வாகிகள் தான் பிறந்த சாதியை கேடயமாக பயன்படுத்தும் நிலை தமிழ்நாடு முழுவதும் உள்ளது.இதுபோன்ற நிலை களையப்பட வேண்டும்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை

சரியாக சொன்னீர் ஒற்றரே…

சகோதர சண்டையை விட்டுவிட்டு, தனது சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையாக உழைக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது செய்தி தளம் என்றும் துணை நிற்கும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.