கீழடியில் 16வது நிதிக்குழு

சிவகங்கை

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது.

தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தனர்.

இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் இஆப, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப, சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), உதவி இயக்குநர்( தணிக்கை) மற்றும் முக்கிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Also Read  தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்