ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12525 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களின் இடமாற்ற அதிகாரத்தை பிடிஓக்களிடம் வழங்கவேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் செய்யும் அதிகாரத்தை பிஏ பிடியிடம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் போராடிய பிறகு அதிகாரம் வழங்கப்பட்டது.
அதே அதிகாரத்தை பயன்படுத்தி ஊராட்சி செயலாளர்களை பழிவாங்கும் போக்கு கடந்த சில மாதமாக அதிகரித்து வருகிறதாம்.
27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் முடிவுக்கு வர உள்ளதால், ஊராட்சி செயலாளர்களை உள்நோக்கத்தோடு இடமாறுதல் செய்யும் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறதாம்.
ஆளும்கட்சியினர் ஒருபக்கம், அதிகாரிகள் மறுபக்கம் என இரண்டு பக்கத்தில் இருந்து விழும் அடியால் விழி பிதுங்கி உள்ளனர் ஊராட்சி செயலாளர்கள்.
ஊரக வளர்ச்சித் துறையில் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள துறையின் இயக்குநர் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும். இந்த இடமாற்ற விசயத்தில் சரியான முடிவை எடுத்திட வேண்டும். இல்லையேல், இது நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் இடமாற்றம் செய்யும் போக்கு மிக அதிகமாக உள்ளது.