கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி நெடுந்தூரத்திற்கு பணி மாறுதல் செய்து வரும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளதை போன்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் கவுன்சிலிங் முறையில் வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது கவுன்சிலிங் முறை இல்லாததால் வெகுவாக ஊராட்சி செயலர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு விரைந்து தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் தனி அலுவலர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பந்தாடப்படுவது உறுதி என்றும் இதற்கான தீர்வு இத்துறையை முழுமையாக அறிந்து வைத்துள்ள தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் திரு. பொன்னையா இஆப அவர்களால் மட்டுமே கொண்டுவர முடியும் என்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
நீண்ட காலமாக ஊராட்சி செயலர்கள் எதிர்பார்த்து வரும் வட்டாரத்திற்குள் கவுன்சிலிங் முறையில் 03 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி மாறுதல் என்ற உத்தரவு வெகு சீக்கிரம் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது