ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை

கண்டன அறிக்கை

கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன் ஊராட்சியில் சரிவர பணிகள் செய்வதில்லை கேட்டதற்கு மாவட்ட அலுவலர்களை தற்கொலைக்கு தூண்டியதாக பொய்யான ஒரு பிரச்சாரத்தை ஏற்படுத்தி மாவட்ட அலுவலர்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது அ.ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையிலானதமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.

உரிய முறையில் பிரச்சனை என்னவென்று விசாரணை செய்யாமல் இப்படி ஒரு தவறான அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்திற்கு வன்மையான கண்டத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கோயம்புத்தூர் மாவட்ட மையம் தெரிவித்துக் கொள்கிறது
மேலும் பொய்யான பிரச்சாரத்தை திரும்ப பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது

மாவட்ட மையம்
TNRDOA -CBE

Also Read  ஜெகதேவி ஊராட்சியில் இணைந்து செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள்