மனிதம்
எவ்வளவோ இந்திய ஆட்சி பணியாளர்களை தமிழ்நாட்டு மக்கள் கண்டு வந்துள்ளனர். எங்களை போன்ற பத்திரிகையாளர்களும் நெருக்கமாக அவர்களின் பணிகளை கண்காணித்து வருகிறோம்.
அனைவரையும் விட மாறுபட்டு இருக்கிறார் பொன்னையா இஆப அவர்கள். 1994ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித்துறையில் பணியில் சேர்ந்து, 2009ல் இஆப ஆக உயர்வு பெற்று, இன்று அந்த துறைக்கே ஆணையராக வந்துள்ளது வரலாற்று நிகழ்வு ஆகும்.
ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்கள்,அதிகாரிகள், நண்பர்கள் என வாழ்த்துக்கள் வானளவ குவிந்து வருகிறது.
அப்படி வந்துள்ள வாழ்த்துக்களில் சில துளிகள்..
ஊரகவளர்ச்சி துறையின் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள பணியாளர்களின் நலன் காக்கும் மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏 க,பாலசுப்பிரமணியன் மாநில தலைவர்
தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறை ஆணையாளராக ஐயா பா. பொன்னையா இந்தியா ஆட்சிப் பணி அவர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளதால் மிக மகிழ்ச்சியுடன் மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி
ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக💐💐💐💐💐 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
இவண்
சி. முத்துமாயன் மாவட்ட தலைவர்
*💐 நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐*
*தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்து ….*
*தற்போது ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள கிராம ஊராட்சி பணியாளர்களின் வாழ்வில் விடியல் ஏற்படுத்த முழு முழுயற்சி எடுத்த, TNGOTS மாநில அமைப்பு சார்பாக பணியாளர்கள் சோரிக்கைகளை சுமந்து செல்லும் போது இன்முகத்தோடு வரவேற்று… உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர முழு முயற்சி எடுக்க படும் என்றும், அதற்கான பூர்வாங்க பணிகளை உடனே துவங்கிய*
*மதிப்புமிகு ஐயா திரு. பா.பொன்னையா (இ.ஆ.ப ) அவர்களின் ஆற்றல் மிக்க பணி மென்மேலும் சிறப்படைய தமிழ்நாடு TNGOTS அமைப்பின் ஒட்டு மொத்த பணியாளர்கள் சார்பாகவும், TNGOTS சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்*
*💐வாழ்த்துகளுடன்💐*
*TNGOTS-SRG-CM- 02/2023*
*மாநில மையம்*மதுரை மாவட்டம்
ஊரக வளர்ச்சித் துறையின் தெய்வமாக கருதப்படும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஓய்வு இரா வெங்கடேசன் திருவள்ளூர் மாவட்டம்
*💐வாழ்த்துகிறோம்💐*
*ஊரகவளர்ச்சித்துறையின் இயக்குநராக இருந்து தற்போது ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ள ஊராட்சி செயலர்களின் பாதுகாவலர்,பாதுகாப்பு அரண் பாசமிகு ஐயா திரு.பா.பொன்னையா இ.ஆ.ப அவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்*
*💐வாழ்த்துகளுடன்💐*
*TNPSA-SRG-DGL-09-20*
*மாநில மையம்*
ஊராட்சி செயலர்களின் பாதுகாவலர் மதிப்புமிகு பொன்னையா ஐஏஎஸ் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி சிறப்பித்த மாண்புமிகு தமிழக அரசுக்கும் பதவி உயர்வு பெற்று ஆணையராக பொறுப்பேற்கும் நமது துறை இயக்குனர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இவன் சேலம் வி குமரேசன் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம்.
💐💐💐💐💐💐💐💐
💐💥 வாழ்த்துபா💥
ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையரே
வளர்ச்சித்துறை பணியாளர்களின் பாதுகாவலரே
புன்னகையில் பூவிதழே
பணியாளர்களுக்கு வள்ளலே
பொறுமையின் சிகரமே
உமக்கு ஈடாக இல்லை எவரெஸ்ட் சிகரமே
தன்னலமில்லா தவப்புதல்வனே
பொதுநலம் கொண்ட தங்கத் தமிழனே
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்
தன்மகனை சான்றோன் எனக்
கேட்டதாய்! இது அய்யன் வள்ளுவனின் பொன் மொழி
வள்ளுவன் கூறிய வழி மானுட வாழ்வில்
பெற்றோருக்கு பெருமை பெற்றுதந்துள்ளீரே
இன்று!
எளிமையின் இலக்கணமே
நாங்கள் கண்டதில்லை உம்மிடம் தலைக்கணமே
பெயரிலே தங்கத்தை கொண்ட அய்யா
பெயருக்கேற்ப வாழ்ந்து வருகிறீர் மெய்யாய்!
பார்க்கும் பார்வையிலே கருணை தெரியிது
பேசும் வார்த்தையிலே எளிமை இருக்குது
அடிமட்ட பணியாளர்களின் அகல் விளக்கே
உம்மால் பிரகாசிக்கப் போகிறது பல விளக்கு
வளர்ச்சித்துறையின் மாணிக்கமே
எங்கள் வாழ்வை உயர்த்துவீர்கள் என்பது எங்கள் ஏக்கமே!
பெயரிலே உள்ளது தங்கம்
வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு என்றுமே நீங்க சொந்தம்
ஊரக வளர்ச்சித்துறையின் தகப்பன் சாமியே!
பணியாளர்கள் நாங்களெல்லாம் உங்களை நம்பியே!
நம்பிக்கையின் நாயகனே
வளர்ச்சித் துறைக்கே நீங்கதான் நாயகனே
கள்ளம் கபடமில்லா புன் சிரிப்பு
அதிலே தெரியிது உன் வெள்ளை மனசு
ஏற்றத்தாழ்வு காணாத ஏசு பிரானே
ஏழைகளுக்காக அனுப்பப்பட்ட அசகாயசூரனே
உங்க வெள்ள மனதுக்கு தேடி வந்தது ஆணையர் பதவி
இனி பணியாளர்களுக்கு செய்யப் போறீங்க எண்ணற்ற உதவி
கெம்பீர நடையிலே! மிடுக்கான உடையிலே
காண்போரை கையெடுத்து வணங்க வைக்கும் தோற்றம்
இனி வரப்போகுது வளர்ச்சித் துறையில் மாற்றம்
தீரப்போகுது பணியாளர்களின் ஏக்கம்
வளர்ச்சித்துறையில் இனி இல்லை துக்கம்
மலர்கின்ற புத்தாண்டு உங்களுக்கும்!குடும்பத்தாருக்கும் புதுமைகள் கொண்டு வரட்டும்!
மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!
இன்பங்களை இணைத்து விடட்டும்
துன்பங்களை துரத்திவிடட்டும்!
நெஞ்சங்களை வாரி வழங்கட்டும்!
அன்பு நெஞ்சங்களை வாரி வழங்கட்டும்!
நீடுழி வாழ்க! வாழ்க! என சங்கே முழங்கட்டும்!
உங்களால் அடிமட்ட பணியாளர்களின்
வாழ்வு சிறக்கட்டும்!
💐வாழ்த்தின் மகிழ்வில்💐
ச.சங்கீதா,
மாநில மகளிரணி செயலாளர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.✍️
வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது…..