விருதுகள்
சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட்15 என இரண்டுமுறை மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி வருகின்றது.
சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிகளுக்கு பல்வேறு காரணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை விருது வழங்கி வருகிறது.
மாநில அரசு
மாநில அரசு சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சி தினம் கொண்டாடும் நாளன்று சிறந்த ஊராட்சி மற்றும் அலுவலர்களை மாவட்டவாரியாக தேர்வு செய்து மாவட்ட தலைநகரில் வைத்து விருது வழங்கவேண்டும்.
சிறந்த ஊராட்சிகள் மற்றும் அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவர். பத்திரிகை துறையை சேர்ந்த ஒருவர், சமூக ஆர்வலர் ஒருவர், அறக்கட்டளை நடத்துபவர் என பல்வேறு நபர்கள் கொண்ட குழுவால் பாரபட்சமின்றி தேர்வு செய்ய குழு அமைக்க வேண்டும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளின் மேம்பாடுகளுக்கு தனியாக நிதி ஒதுக்கிட வேண்டும்.
மக்களோடு நேரடி தொடர்பில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துவரும் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் இந்த கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உத்தமர் காந்தி விருது வழங்குவதும் தொடரலாம்.