தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?

ஒரு நாடு ஒரே தேர்தல்

ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல.

மாநில சுயாட்சி பேசும் திராவிட கட்சிகள் உள்ளாட்சியின் தன்னாட்சி பற்றி ஒருக்காலமும் கவலைப்படாது. ஆனால், மாநில சுயாட்சி என மார்பில் அடித்து மத்திய அரசை பார்த்து கூச்சல் போடுவார்கள்.

ஆனால், அதே நிலையில் உள்ள உள்ளாட்சி தேர்தலை இரண்டு திராவிட கட்சிகளும் ஒத்திவைப்பார்கள். அதற்கு இரண்டு கட்சிகளும் கண்டுபிடித்த காரணம் வார்டு வரன்முறை.

வார்டு வரன்முறை

2025 ஆண்டு ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பதவிக் காலம் முடிவடைகிறது என அனைவருக்கும் தெரியும். புதிய நகராட்சி,மாநகராட்சி,பேரூராட்சி,ஊராட்சிகள் இணைப்பு பற்றி முன்கூட்டியே ஆலோசித்து ஏன் முடிவு எடுக்கவில்லை.

இதே போல, மக்கள் தொகைக்கு தொகுதிகள் சீர்திருத்தம் என்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் காலம் முடிவடையும் போது, ஆறு மாத காலம் கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால் அனைத்து கட்சிகளும் கொந்தளிப்பார்கள் அல்லவா?

இந்திய ஜனநாயகத்தின் முதுகெழும்பே உள்ளாட்சி ஜனநாயகம் தான். அந்த முதுகெழும்பை முறித்து போடும் செயலை கடுமையாக எந்த கட்சிகளும் கண்டிக்கவில்லை.

Also Read  இம் என்றால் இடமாற்றம்- பிடிஓக்களின் ஆணவ போக்கு

இந்த புத்தாண்டு உள்ளாட்சி ஜனநாயகத்திற்கு நல்லதாக பிறக்கவில்லை.

என்னங்க சார் உங்க உள்ளாட்சி ஜனநாயகம்?