லஞ்ச ஒழிப்புத்துறை-முடங்கும் அரசுதுறைகள்- ஒற்றர் ஓலை

மாற்றம் என வந்தவர்களால் முடங்கும் அரசு துறைகளா ஒற்றரே…

ஆமாம் தலைவா…எப்போது லஞ்ச ஒழிப்புதுறை வருமோ என்ற பதட்டத்தில்  அரசு அலுவலங்கள் எல்லாம் முடங்கும் நிலை என்பது உண்மைதான்.

லஞ்ச அதிகாரிகளை தண்டிப்பது தவறு இல்லையே ஒற்றரே…

தவறு இல்லை தலைவா…ஆனால், லஞ்ச ஒழிப்பு சோதனையை சாதனையாக செய்ய முயல்வது தான் சிக்கல். அரசு நிர்வாகம் 90சதவீதம் லஞ்சத்தால் சிக்கி உள்ளது.அது லஞ்ச ஒழிப்புத்துறை உட்பட….அரசு நிர்வாகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் லஞ்ச ஒழிப்பு சாத்தியப்படும் தலைவா.,

அதிகம் எந்த துறை பாதிக்கப்பட்டுள்ளது ஒற்றரே..

மக்களோடு நேரடி தொடர்பில் உள்ள வருவாய் மற்றும் உள்ளாட்சி துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த துறைகளில் பலவகையான அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவதையே தவிர்த்து வருகிறார்கள்..அதனால்,மக்கள் பணி முடங்கும் அபாயம் உள்ளது.

இதற்கு என்ன தீர்வு…

அலுவலகம் வந்து பணி செய்யாத அலுவலர்களின் மீது அந்தந்த துறை சார்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் பணிக்கு வராத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  ஆண்டிபட்டி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!