சுதந்திர தினம்
80 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய கொடியின் வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஒரு கட்டிடத்தின் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அது எங்கே உள்ளது? என்ன கட்டிடம் என தேடினோம்.
நமக்கு கிடைத்த விடை
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள வில்பட்டி ஊராட்சி அலுவலக கட்டிடம் தான் அது என்று தெரிந்து கொண்டோம்.
இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமத்தில் சுதந்திர தினத்தை எழுச்சியோடு கொண்டாடிய நிகழ்வு அந்த ஊராட்சி மக்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இவ்வளவு சிறப்பாக சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்த அந்த ஊராட்சியின் செயலாளருக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.






























