என்ன ஒற்றரே..இன்னுமா சம்பள பிரச்சனை.
தலைவா…கடந்த மாதம் வரை மாதமாதம் 5ம் தேதிக்குள் ஊராட்சி செயலாளருக்கு சம்பளம் வரவு வைக்கப்பட்டு வந்தது.ஆனால்,நிதி இருந்தாலும் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் போடவில்லையாம்…
என்ன காரணம் ஒற்றரே…
பிடிஓக்களின் அலட்சியம் மட்டுமே காரணம். பெரும்பாலான பிடிஓக்கள் ஓடிபி சொல்லி சம்பளம் போட்டுவிட்டனர். மாவட்டவாரியாக சில பிடிஓக்கள் அலட்சியம் காட்டி வருகிறார்களாம்.
அவர்களுக்கு மாதக்கடைசியில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை என்றால் எவ்வளவு துடிப்பார்கள் ஒற்றரே..
ஆமாம் தலைவா…அலட்சியமாக செயல்படும் ஒன்றிய அதிகாரிகளை மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஓய்வே கொடுக்காமல் ஊராட்சி செயலாளர்களை பிழிந்து வேலை மட்டும் வாங்கும் அதிகாரிகள்,சம்பள விசயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதற்கான நிரந்தர தீர்வை நோக்கி பயணப்பட வேண்டும் ஒற்றரே…
ஆமாம் தலைவா…இந்த நிலை தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பெயர்களை செய்தியாக வெளியிட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.























