என்ன செய்தி ஒற்றரே…
ஊரக வளர்ச்சித்துறையில் சமீபத்தில் 60க்கும் மேற்பட்டோர் இடமாறுதல் உத்தரவு வந்ததல்லவா..அப்போதையே கவுண்டர் சமூக அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அதிருப்தி பேச்சு ஆரம்பித்தது.
இப்ப என்ன விசயம் ஒற்றரே..
அதை நிரூபிக்கும் வகையில் செயல்கள் நடைபெற உள்ளது.நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குநர் வடிவேலுவை மாற்றக் கூடாது. அங்கேயே தொடர வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் வழிவுறுத்தி உள்ளாராம்.
அப்படியென்றால், இடமாறுதலில் மாற்றம் வர உள்ளதா ஒற்றரே…
ஆமாம் தலைவா…சாதி பாசத்தால் வடிவேலுவே வேண்டும் என அமைச்சர் நெருக்கடி கொடுக்கிறாராம் . அதனால் விரைவில் இடமாறுதல் பட்டியல் வெளியாகலாம். கவுண்டர் லாபியில் சிறிய உதாரணம் மட்டுமே இது. பட்டியல் வந்த பிறகு விரிவாக விவாதிப்போம்.
பாதிக்கப்பட்ட அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் ஒற்றரே…
குறிப்பாக,தென்மாவட்ட அதிகாரிகள் பெரிய அளவில் வட மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பட்டியல் சமூக அதிகாரிகளின் பாதிப்பு அதிகம் தலைவா..
சமூகநீதி அரசில் இந்த நிலையா ஒற்றரே…
ஆமாம் தலைவா…குறிப்பிட்ட ஒரு அதிகாரியின் செயலால் இடமாறுதல் பட்டியல் குளறுபடி நிரம்பியதாக மாறிவிட்டது. இந்த அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.துறை அமைச்சர் என்ன செய்கிறார் என தெரியவில்லை என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

























