ஓய்வூதியம்
தமிழக அரசின் உறுதிபடுத்தப்பட்ட ஓயவூதிய திட்டத்தில் இணைக்க கோரி தொடர்போராட்டத்தை சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் தற்போது தனி அலுவலர் காலம் நடந்து வருவதால், ஊராட்சிகளின் மக்கள் பணி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தெருவிளக்கு தொடங்கி குடிநீர் என அன்றாட பிரச்சனை வாக்குகளாக மாறும் சூழல் உள்ளது.
தேர்தல்நேரம்
இன்னும் இரண்டே மாதம் மட்டுமே உள்ளது பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு. பிற அரசு ஊழியர்களின் போராட்டத்தை விட, மக்களிடம் அன்றாடம் நேரடி தொடர்பில் உள்ள ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் ஆளும் கட்சிக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயரை உருவாக்கி வருகிறது.
இந்த போராட்டம் தொடர்ந்தால், ஊரக பொதுமக்கள் தங்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்படும். அது, ஆளும்கட்சியின் மீது வெறுப்பாக மாறும் நிலை ஏற்படும். இதனை, தக்க வகையில. பயன்படுத்த எதிர்கட்சியில் தயாராகி வருவதாக தகவல்.
இந்த போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் ஆளும்கட்சிக்கு உள்ளது.
அடுத்து…என்ன நடக்கப்போகிறது?


























