ஊரக வளர்ச்சி துறையில் இருந்து மற்றுமொரு இஆப

இஆப

ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வில் இந்திய ஆட்சி பணியாளராக வருவர்.அதிலும், வருவாய் துறையில் இருந்து பெரும்பான்மையானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஊரக வளர்ச்சித்துறையில் அத்தி பூத்தது போல ஆபூர்வமாக மட்டுமே பதவி உயர்வில் இஆப வாக வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி வந்தவர்களில் ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா இஆப  அவர்கள் முக்கியமானவர்.

அப்துல் ராஷிக்

தற்போது ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வரும் அப்துல் ராஷிக் இந்திய ஆட்சி பணியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

முன்னதாகவே அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏற்கனவே நமது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

பல்வேறு தடைகளை உடைத்து அப்துல் ராஷிக் அவர்களுக்கு இந்திய ஆட்சி பணியாளராக உத்தரவு வெளியாவதற்கு முழு முயற்சியையும் மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்தார் என தலைமை செயலகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவி உயர்வு பெற்றுள்ள அப்துல் ராஷிக் அவர்களுக்கும், அதற்கு முழு முயற்சி எடுத்துள்ள மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும் நமது இணையதளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை - ஒற்றர் ஓலை