தனது தவறை மறைக்க பொய்யான பாலியல் குற்றச்சாட்டா? – ஒற்றர் ஓலை

நமது செய்தியின் எதிர்வினை தகவலா ஒற்றரே…

ஆமாம் தலைவா…மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் குழுவிற்கான பணத்தை அபகரிக்கும் செயல் நாடெங்கும் நடக்குகிறது.அதனை தட்டி கேட்கும் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்படுவதாக நேர்மையான அதிகாரிகள் சொல்கிறார்கள்.

எது உண்மை ஒற்றரே…

சுய உதவிக்குழு சார்ந்து நீண்ட விசாரணை தேவை.அதுபற்றி துறை சார்ந்த அதிகாரிகள் தான் உண்மை நிலையை விசாரிக்க வேண்டும். திருநெல்வேலியில் நடந்தது என்ன என்று விரிவான விசாரணை செய்ய வேண்டும் தலைவா

சரிதான் ஒற்றரே…குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தெரிய வேண்டியது அவசியம்.

ஆமாம் தலைவா….அந்த குற்றச்சாட்டால் அவர் சார்ந்த குடும்பத்தினர் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதேவேளை, குற்றச்சாட்டு உண்மை என்றால்…கடும் தண்டனை அவசியம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை