வானூர்தியில் வரும் உதவி இயக்குநர் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…சூப்பரான தகவலாக இருக்கு.

ஆமாம் தலைவா…கடந்த முறை தலைநகர் பக்கத்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி பேசுனோம் அல்லவா…

ஆமாம் ஒற்றரே…அதன் தொடர்ச்சியான செய்தி உண்டா.

அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தகவல் கிடைத்த உடன் சொல்கிறேன்.அந்த செய்தியை படித்த ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சொன்ன விசயம் தான் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது தலைவா…

என்ன விசயம் ஒற்றரே…

மாதமாதம் சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து உதவி இயக்குநர்கள் வருவார்கள்.அதில் ஒரு உதவி இயக்குநர் மட்டும் விமானத்தில் தான் வந்து செல்வாராம் தலைவா

யாரு அது ஒற்றரே…

மேற்கு மண்டலத்தில் பணிபுரிபவர். அவரை பற்றி நமக்கு வரும் செய்திகள் கமிசன் பற்றியே உள்ளது.  பதவி இழந்துள்ள பவர்புல் அமைச்சர் தனக்கு உறவினர் என அனைத்து காரியங்களையும் அரங்கேற்றுகிறாராம்.

பெயரை கூறும் ஒற்றரே…

முழுமையாக விசாரித்த பிறகு சம்மந்தப்பட்டவரின் பெயரை கூறுகிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்