ஊராட்சி/ தணிக்கை
ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக உள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நமது துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா இஆப அவர்கள்,ஊரக வளர்ச்சிதுறையில் பணியில் சேரும்போது உதவி இயக்குநர் பதவிக்கு பதிலாக….ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இணையான பதவிகள் இருந்தன.
அன்று இராமநாதபுரம் மாவட்டம் இரண்டு மண்டலமாக இருந்தபோது,பரமக்குடி மண்டல அதிகாரியாகத் தான் அரசு பணியை ஆரம்பித்தார்.
தனி அலுவலர்
28 மாவட்டங்களில் தனி அலுவலர் காலத்தில் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உதவி இயக்குநர்(ஊராட்சி மற்றும் தணிக்கை) என இருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உதவி இயக்குநர் (ஊராட்சி) அதிகாரத்தை முழுமையாக உதவி இயக்குநர்(தணிக்கை) அவர்களுக்கு அளித்து,நிர்வாகத்தை செம்மை படுத்த வேண்டும். சிறிய மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் இதனை நிரந்தமாக நடைமுறை படுத்தவேண்டும்.
அப்படியொரு நிர்வாகம் அமைந்தால், ஊராட்சிகளின் செயல்பாடுகளை கண்காணித்து விரைவாக செயல்படுத்துவது வெகு சுலபமாக இருக்கும்.
ஊரக வளர்ச்சித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வந்துகொண்டிருக்கும் ஆணையர் அவர்கள் இதனை கட்டாயம் நடைமுறைபடுத்திட வேண்டும்.