ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தஞ்சையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
எத்தனை பேர்கள்
தமிழ்நாடு முழுவதும் 12525 ஊராட்சிகளில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. 10 ஆயிரத்துக்கும் பேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இன்றைய போராட்டத்தை ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையிலான சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எத்தனை ஊராட்சி செயலாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து கலந்து கொண்டுள்ளனர் என மென்மாவட்டங்கள் தொடங்கி அனைத்து மாவட்டங்களில் பல்வேறு அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தோம்.
ஒருசில மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய அனைத்து மாவட்டங்களில் 80 சதவீதமான ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.