அமைச்சரை சந்தித்த தேனி மாவட்ட சங்க நிர்வாகிகள்

ஊரக வளர்ச்சித்துறை

தேனிமாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன்,மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை சம்மந்தமாக சந்தித்து பேசினர்.

1. ஊராட்சி செயலர்களின் ஊதியத்தினை கருவூலம் மூலம் வழங்குவது.
2. ஊராட்சி செயலர்களின் பணிநிலையினை சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலைகளாக உருவாக்குதல்
3. ஊராட்சி செயலர்கள் ஓய்வு பெறும் பொழுது வழங்கப்படும் பணிக்கொடையினை 5 லட்சமாக உயர்த்தி வழங்குதல்

ஆகிய கோரிக்கையுடன்  தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை தேனியில் நடத்திட மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தேதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

Also Read  எலவனூர் ஊராட்சி - கரூர் மாவட்டம்