சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம்
ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக “தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன் அடிப்படையில் சீர்காழி கொள்ளிடம் திரு.M. நாராயணன் அவர்கள் மற்றும் கோவை மாவட்டம் அவினாசி திரு.சி.கருப்பசாமி அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் “தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம்” என்று பெயர்மரற்றம் செய்யப்பட்டது.
சீர்காழி திரு.M. நாராயணன் மற்றும் அவினாசி திரு.சி.கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக “தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்” சங்கம் என்ற புதிய அமைப்பினை உருவாக்கி சீரகாழி திரு.M.நாராயணன் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் 1986-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் திண்டுக்கல்லில் “தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்” மாநில மையம் புதிததாக துவங்கப்பட்டது. அந்த மாநில மையத்தில் தான் சிவகங்கை மாவட்டம் இணைந்து செயல்பட்டு வந்தது.
அதன் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனையின் பேரில் தான் செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்த சிவகங்கை மாவட்டம் அச்சங்கத்திலிருந்து வெளியேறியது.
பிரிந்து கிடந்த சங்கங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.ஜெ.ஜெயராமன், முன்னாள் மாநிலத் தலைவர் திரு.ஏ.பி.கந்தசாமி, முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் திரு.சோம செல்வராஜ் ஆகியோர் சீரகாழி திரு.M. நாராயணன், அவினாசி திரு.சி.கருப்பசாமி, புதுக்கோட்டை திரு.A.சண்முகசுந்தரம் ஈரோடு திரு.எஸ்.செல்வராஜ், கிருஷ்ணகிரி திரு.M.நாகலிங்கம் அம்பாசமுத்திரம் திரு.ச.சண்முகசுந்தரம் ஆகியோரை நேரில் சந்தித்து எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 30.10.1993-ல் “ஒருங்கிணைந்த மாநில மாநாடு” சிவகங்கையில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் மாநிலத் தலைவராக அவினாசி திரு.சி.கருப்பசாமி அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளராக சீர்காழி திரு.எம்.நாராயணன் அவர்களும், மாநிலப் பொருளாளராக ஈரோடு திரு.எஸ்.செல்வராஜ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அப்பொழுது 23 மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
பிரிந்து கிடந்த சங்கங்களை ஒன்றிணைத்து “தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம்” என்ற அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
(மாற்று கருத்து இருந்தாலும் வெளியிடப்படும்)
நமது இணைய செய்தி தளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் வரலாற்றை பதிவு செய்ய உள்ளோம். அடுத்தடுத்து அனைத்து சங்கங்களின் வரலாற்று செய்திகள் வெளிவரும்.
தொடரும்…..