திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற செயற்குழு

தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)

மாநில செயற்குழு மற்றும்  30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா

நாள் 30.11.2024 சனிக்கிழமை

நேரம்: காலை 12.00 மணி

இடம்: ரவி மீட்டிங்கால்,திருச்சி

தலைமை :கோவை திரு.R.ரெங்கராஜ்

வரவேற்புரை
புதுகை திரு.A.மணிராஜ்,மாநில செயல் தலைவர்

முன்னிலை,  கள்ளக்குறிச்சி,திரு.S.பெரியசாமி, மாநில ஒருங்கினைப்பாளர்

விழுப்புரம்
திரு.S.ராஜ்குமார்
மாநில பொதுச்செயலாளர்

தேனி
திரு.A.முத்துச்செல்வம்
மாநில பொருளாளர்

வாழ்த்துரை,மதுரைR.சார்லஸ்
மாநில தலைவர்
அனைத்து பணியாளர்கள் சங்கம்

இராமநாதபுரம், K.ரவி
மாநில பொதுச்செயலாளர்
அனைத்து பணியாளர்கள் சங்கம்

நன்றியுரை
திருச்சிதிரு.S.சோமசுந்திரம்மா. மாநில துனைத்தலைவர்

ஊராட்சி செயலாளர்களின் கீழ்கண்ட கோரிக்கையை வெல்ல அடுத்த கட்ட நிகழ்வு சம்மந்தமாக முடிவு எடுக்கப்பட்டது..

1)ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் மாண்புமிகு தமிழக துனைமுதல்வர்,மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர்,மதிப்புமிகு தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோரை வைத்து தேனியில் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2) ஊராட்சி செயலா்களின் ஊதியம் அரசு கருவூலம் அல்லது ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி )மூலம் வழங்க வேண்டும்.

Also Read  பஞ்சாயத்தில் காசோலை இல்லை

3) ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.

4)ஊராட்சியில் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ20000/- வழங்க வேண்டும்.*

5)ஊராட்சி செயலர்கள் ஓய்வு பெறும் பொழுது தற்போது வாங்கும் ஊதியத்தில் ஓய்வூதியம் 50% வழங்கவேண்டும்.*

6) ஊராட்சி செயலாளர்களுக்குகருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை உடனடியாக வழங்க வேண்டும்.*

7)மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.*

8)தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.*

9) ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ 10000/- வழங்க வேண்டும்.*

மற்றும் பணிசுமை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலந்து முடிவு எடுக்கப்பட்டது..

கூட்டத்தில் கலந்துகொண்ட அணைத்து ஊராட்சி  செயலாளர்களுக்கும் இனிப்பு வழங்கி ஊராட்சி செயலாளர்களின் ஏழுச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது.

அனைத்து மாவட்டத்தில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.