இருக்கூர் ஊராட்சி

இருக்கூர் ஊராட்சி /Irukkur Panchayat ni

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது இருக்கூர். இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2153 ஆகும். தற்போதைய நிலவரப்படி 2456 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 1230 பேரும், ஆண்கள் 1286 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக செல்லப்பம்பாளையம்,
பஞ்சப்பாளையம் ,இருக்கூர், வலசுபாளையம், தெற்குசெல்லப்பம்பாளையம், நோனான்காட்டுபுதூர், செஞ்சுடையாம்பாளையம், சுப்பையாம்பாளையம், வடக்கு செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன.

Also Read  பெரமாண்டபாளையம் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்