தஞ்சை ஊராட்சிகளில் தீபாவளி வசூல் – உண்மை என்ன?

ஊடகம்

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்களில் தீபாவளிக்காக உதவி இயக்குநர் உத்தரவின் பெயரில் வசூல் நடப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

உண்மை

என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டோம். நமது இணைய தளம் பல ஆண்டுகளாக ஊராட்சி செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளில் நிதிநிலை மிகமிக அதள பாதளத்தில் உள்ளது. SFC  வெறும் ஆயிரம் ரூபாய் வரும் ஊராட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்ட ஊராட்சிகளும் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பிறகு எப்படி, தீபாவளி வசூல் நடைபெறும் என்ற குழப்பம் வந்தது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் ஒரு சில ஊராட்சி செயலாளர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்படி ஒரு எந்த வாய்மொழி உத்தரவும் வரவில்லை என உறுதியாக கூறினர்.

பிறகு எப்படி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளி வருகின்றது என முக்கிய நாளிதழின் தஞ்சை மாவட்ட நிருபரிடம் கேட்டோம். நக்கலாக சிரித்துவிட்டு, எல்லாம் கவர் செய்தாததன் காரணம் மட்டுமே என்றார்.

 

Also Read  சிந்தல்பாடி ஊராட்சி - தருமபுரி மாவட்டம்