எரிபொருள் அளவு – ஊரக வளர்ச்சித்துறையில் கோரிக்கை

உள்ளாட்சி

ஒரு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதன்மை அதிகாரியாக திட்ட இயக்குநர் செயல்படுகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதனால், அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு எரிபொருள் மாதம் 300 லிட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

திட்ட இயக்குநருக்கு அடுத்த நிலையில் உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் நிர்வாகத்தினை கண்காணிப்பது தொடங்கி, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது வரை உதவி இயக்குநரின் பணி உள்ளது. இவர்கள் பயன்படுத்தும் வாகனத்திற்கு மாதம் 150 லிட்டர் பயன்படுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்கட்டுள்ளது.

எரிபொருள் அளவு?

திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்( ஊராட்சி) என இருவருக்கும் எரிபொருள் அளவை உயர்த்தி கொடுப்பது மிக அவசியம் ஆகும்.

குறிப்பாக, உதவி இயக்குநரின் வாகனத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவை ஒரு மடங்கு உயர்த்தி 300லிட்டராக பயன்படுத்திட உத்திரவு இடுவது அவசியம் ஆகும்.

இல்லையேல், உதவி இயக்குநர் வாகனத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எரிபொருள் நிரப்ப வேண்டி உள்ளது. அந்த செலவை சரிசெய்ய வேறொரு கணக்கில் சரி செய்ய வேண்டியது உள்ளது. ஆக, இந்த நிலை வராமல் இருக்க எரிபொருள் அளவை உயர்த்திடல் வேண்டும்.

Also Read  மாதலப்புரம் ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்

உதவி இயக்குநர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்ந்து பயன்படுத்தும் எரிபொருள் அளவை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்கள் பரிசீலனை செய்து, நல்ல தீர்வை கண்டிடல் வேண்டும். ஏனெனில், இந்த துறை பற்றி அடிமட்ட பிரச்சனை அனைத்தும் அறிந்தவர் இயக்குநராக உள்ளார்.

உறுதியாக நல்ல முடிவு எடுப்பார் என நமது இணைய செய்தி தளமும் நம்புகிறது.